சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி அதிகாரபூர்வமாக ‘தேசிய விண்வெளி தினமாக’ அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
அதன்படி, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்தியாவின் தேசிய விண்வெளி தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இனிய தேசிய விண்வெளி தின வாழ்த்துக்கள். இன்னும் பெரிய கனவுகளைக் காண்போம், மேலும் புதுமைகளைப் புகுத்துவோம், புதிய எல்லைகளைத் தொடுவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

