கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இதன் முகப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும், பெரியார் அறிவுலகம் தொடர்பான கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார்.மேலும், ரூ.200 கோடி மதிப்பிலான நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். பெரியார் அறிவுலகம் என்பது நூலகம் மற்றும் அறிவுசார் செயல்பாடுகளுக்கான முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. இங்கு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் படிப்பதற்கும், அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் தேவையான வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, பெரியார் அறிவுலகத்துக்கு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திறப்பு விழா கோவையின் கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சியில் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
