நடிகர் விஜய் The Goat திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17 மாலை 5மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

இசை இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

THE GOAT’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.முன்னதாக, கோட் திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *