ஒரு வாரத்திற்குப் பிறகு திறக்கப்பட்ட ஈரான்–பாகிஸ்தான் எல்லை

அரசியல் உலகம் சிறப்பு செய்திகள் பாகிஸ்தான் பொருளாதாரம்

ஈரானுடனான எல்லையை ஒரு வாரமாக மூடியிருந்த பாகிஸ்தான் அரசு, தற்போது மீண்டும் திறந்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. எல்லை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட வணிகர்களும், பொதுமக்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் மாவட்டத்தில், ஈரானுடன் இணைக்கும் காப்ட்–ரிம்தான் மற்றும் டஃப்தான் ஆகிய எல்லைச் சோதனைச் சாவடிகள் கடந்த 17ஆம் தேதி மூடப்பட்டன. இதற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை பாகிஸ்தான் அரசு அறிவிக்கவில்லை. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கடத்தலைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.எல்லை மூடப்பட்டதால் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குப் பொருட்கள் கொண்டு வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், சில இடங்களில் சிலிண்டரின் விலை ரூ.10,000-ஐத் தாண்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்தது.இந்நிலையில், ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த எல்லைச் சோதனைச் சாவடிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *