கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு நடிகர் கமல் கார் பரிசாக அளித்துள்ளார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

கோவையைச் சேர்ந்த ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். இதனால் ஷர்மிளாவுக்கு சிறு வயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.
இதையடுத்து ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் பயணம் செய்தார்.
அதன்பின், தான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஷர்மிளா செயல்படுவதாக பேருந்து உரிமையாளர் அவரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா தொடரும் வகையில் நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *