தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது.
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், வரும் 22ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியானது. தவெகவின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த விஜய் தரப்பினர் திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தப்போவதாகவும் அதற்கு முன்னர் தவெகவின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று நடிகர் விஜயின் தவெக கட்சியின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் கட்சி கொடி காட்சியளிக்கிறது. பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் தவெக கட்சியின் கொடி தற்போது பறக்கவிடப்பட்டுள்ளது. ஆனால் இது தவெகவின் அதிகாரப்பூர்வ கொடி தான் என்பதை அக்கட்சி இன்னும் உறுதி செய்யவில்லை.