பி.எஸ்.என்.எல். நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லாபம் ஈட்டியுள்ளது.

இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ. 262 கோடி லாபம் பெற்றதாக ஒன்றிய தொலை தொடர்புத்துறை அறிவித்துள்ளது.2023-24 அக்டோபர்-டிசம்பர் காலத்தில் 1,262 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்பட்டது. ஆனால் 2024-25 அக்டோபர்-டிசம்பர் காலத்தில் 232 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றுள்ளது. இந்த காலத்தில் செயல்பாட்டு லாபம் 1500 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. 2024 ஜூன் மாதம் முதல் 2025 பிப்ரவரி மாதம் வரை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 8.55 கோடியில் இருந்து 9.1 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 6 மாதங்களில் 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவையைப் பயன்படுத்த தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *