இந்தியாவில் இன்று வானில் தோன்றும் பிங்க் நிலவு.

இந்தியா இயற்க்கை உலகம் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள்

இந்தியாவில் இன்று (ஏப்ரல் 12) வானில் ‘இளஞ்சிவப்பு நிலவு’ (PINK MOON) காணப்படும். இதனை நேரடியாக கண்களால் காணலாம். இந்த ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவாக இது இருக்கும், ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவான அபோஜி என்ற இடத்தில் இருப்பதனால் இதனை மைக்ரோ மூன் (MICRO MOON ) எனவும் குறிப்பிடுகிறார்கள்.வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவை “பிங்க் மூன்” என அழைக்கின்றனர், ஆனால் இது பிங்க் நிறத்தில் தோன்றாது. வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் மலரும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ “மோஸ் பிங்க்” என அழைக்கப்படுகிறது. இந்த பூக்கள் வசந்தத்தின் ஆரம்பத்தை குறிக்கின்றன, இதன் அடிப்படையில் வசந்த காலத்தில் தோன்றும் நிலவிற்கு “PINK MOON” என்ற பெயர் உருவானது என கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *