தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த படம் ’மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
நடிகர் அஜித் இப்படத்தில் வாலி, வரலாறு ஆகிய படங்களை தொடர்ந்து நீண்ட நாட்கள் கழித்து நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடலகள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்னணி இசையானது இன்றும் பல ரசிகர்களில்ன் ப்ளேலிஸ்டை அலங்கரித்து வருகிறது. மேலும் அஜித்தின் பைக் வீலிங் காட்சிகளும் பெருமளவு பேசப்பட்டது.
இந்த நிலையில் ‘மங்காத்தா’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் படி இப்படம் ஜனவரி 23ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

