சென்னையில் 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இது அனைத்தும் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து 200 டன் கழிவுகள் வரை சேகரிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உடனுக்குடன் பட்டாசு கழிவுகளை அகற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள், மாநகராட்சி ஆணையர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறிய நிலையில் பலரும் அதிகளவிலான நேரத்தில் பட்டாசுகளை வெடித்தனர்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதனை சுத்தம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதில் சுமார் 150 டன் குப்பைகள் நேற்று இரவு வரை சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இன்றும் 200 டன் குப்பைகள் வரை சேகரிக்கப்படலாம் என மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் 19 ஆயிரத்து 600 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது எல்லாம் அபாயகரமான கழிவுகள் என்பதால் வீட்டுக்கு வீடு சென்றும், அல்லது தெருக்களில் குப்பைகள் சேகரித்து அதனை தனிப்பைகளில் சேகரித்து வைத்து மொத்தமாக ஒரு இடத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

