ஒரே நிதியாண்டில் ரூ.9,742 கோடியை அள்ளிய பிசிசிஐ .

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் மாநாடு

2023-24 நிதியாண்டில் ரூ.9,742 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது பிசிசிஐ. இதில் ஐபிஎல் மூலமாக ரூ.5,761 கோடி (59%) பெரும் பங்கு வருமானம் கிடைத்துள்ளது. சர்வதேச போட்டிகள், ஐபிஎல் அல்லாத உள்நாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் ரூ.361 கோடியை பிசிசிஐ ஈட்டியுள்ளது. டாடா குழுமம் 2024-28 வரை ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக ரூ.2,500 கோடி ஒப்பந்தத்தில் இணைந்தது. 2023-27 ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமைகள் 48,390 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. தொலைக்காட்சி உரிமைகளை 23,575 கோடி ரூபாய்க்கு டிஸ்னி ஸ்டாரும், டிஜிட்டல் உரிமைகளை 23,758 கோடி ரூபாய்க்கு வயாகாம்18-ன் ஜியோசினிமாவும் வாங்கியது. இதை தவிர்த்து, வங்கி வைப்பு மற்றும் முதலீடுகளில் இருந்து வட்டியாக மட்டும் ரூ.987 கோடி பெறுகிறது. ஐபிஎல் அல்லாத ஊடக உரிமைகள் மூலம் ரூ.361 கோடி சம்பாதித்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக் (WPL) மூலம் ரூ.378 கோடி ரூவருமானம் பெற்றுள்ளது.ஐசிசியின் வருடாந்திர வருவாயில் 38.5% (ஆண்டுக்கு ரூ.19,88 கோடி) பிசிசிஐ-க்கு வழங்கப்படுகிறது. இது மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் பெரும் தொகையை விட மிக அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *