ஒரு சிறுவனின் ‘துண்டிக்கப்பட்ட தலை’ இஸ்ரேலிய மருத்துவர்களால் மீண்டும் பொருத்தப்பட்டது
விபத்தால் சுலைமான் ஹசன் என்ற 12 வயது சிறுவனின் கழுத்தில் இருந்து மண்டை ஓடு பிரிந்த நிலையில் உள் சிரச்சேதம் இருந்தது.
ஒரு அற்புதமான மருத்துவ சாதனையாக, இஸ்ரேலிய மருத்துவர்கள் 12 வயது அரேபிய சிறுவனின் தலையை மீண்டும் பொருத்த ஒரு அறுவை சிகிச்சை செய்தனர்.
சிறுவன் சுலைமான் ஹசன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவன்மீது கார் மோதியது. கார் மோதியதில் அவனது தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டது. காயத்தின் தீவிரத்தால் அவனது மண்டை ஓட்டின் பின்புற அடித்தளத்தை வைத்திருக்கும் தசைநார்கள் கடுமையாக சேதமடைந்து, அது அவனது மேல் முதுகெலும்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டது.
“சிறுவன் ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்திற்கு உடனடியாக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டான். அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவன் இந்த வாரம் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினான். அவனது தந்தை உணர்ச்சி பெருக்கில் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார், மேலும் எனது ஒரே விலைமதிப்பற்ற மகனைக் காப்பாற்றியதற்காக (அவர்) என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் கண்ணீர் மல்க கூறினார், ”என்று இஸ்ரேல் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தெரிவித்துள்ளது.
புதுமையான தொழில்நுட்பம் மற்றும் சேதமடைந்த பகுதியில் புதிய தட்டுகள் மற்றும் பொருத்துதல்களை பயன்படுத்தி, அறுவை சிகிச்சை அறையில் ஹாசனின் உயிருக்கு மருத்துவர்கள் போராடினர். அவர்களின் நிபுணத்துவம் மற்றும் விரைவான முடிவெடுக்கும் திறன் சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது.அங்கு அவனது தலையை மீண்டும் இணைக்க 12 மணிநேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஹடாசாவில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஓஹாட் ஐனாவ் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அதிசயத்தை நிகழ்த்திய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
