சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தவெகவின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெறும் நிலையில் நட்சத்திர விடுதியின் முகப்பில் வரவேற்பு தோரணை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறவுள்ளது.
இதில் சுமார் 2500 முதல் 3000 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் தவெக கட்சியினர் பேனர்களை வைத்துள்ளனர். இந்நிலையில் விழா நடைபெறும் நட்சத்திர விடுதி முழுவதும் பவுன்சர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, ஓட்டல் ஊழியர்களை தவிர, தோரண நுழைவு வாயிலை தாண்டி பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த 2ம் ஆண்டு விழாவில், தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சூராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பங்கேற்று பேச இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் தவெகவின் 2ம் ஆண்டு விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.

