இந்த வாரச் சின்னத்திரை

சின்னத்திரை செய்திகள்

நம் அனைவரின் உபரி நேரத்தையும் தன்பால் எடுத்துக்கொண்டு நமக்கு பொழுதுபோக்கையும் களிப்பையும் அளிப்பதில் பெரும் பங்காற்றுவது சின்னத்திரை. அத்தகைய சின்னத்திரையின் ஒவ்வொரு வார சுவாரசியங்களையும் உங்களுக்காய் தொகுத்துத் தருவதே இந்த வாரச் சின்னத்திரை.

விஜய் டிவி பிரபலங்கள் அனைவருக்கும் தொலைக்காட்சியைத் தவிர்த்து சமூக வலைதளங்களிலும் ஒரு மிகப் பெரிய இரசிகர் பட்டாளமே இருக்கும். அவர்கள் என்ன பதிவிட்டாலும் அது அன்றின் வைரல் ட்ரெண்ட்டாக மாறும். அந்த வகையில் சமீபத்திய வைரலாக இருப்பவர்கள் பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் குக் வித் கோமாளி புகழ் பாபா பாஸ்கர். பாபா பாஸ்கரின் குடும்ப விஷேச புகைப்படங்களும், சம்யுக்தாவின் நடன காணொளியும் சமீபத்திய வைரலாக அனைவராலும் கண்டு இரசிக்கவும் பாராட்டவும்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் தந்திருக்கும் எதிர்மறை பிம்பத்தால் தனக்கு இருந்த வாய்ப்புகள் பறிபோய்விட்டதாய் அன்பு தான் ஜெயிக்கும் என்று உறுதியாக நம்பிய அர்ச்சனா கவலையுடன் உள்ளார். மேலும் வீடியோ ஜாக்கி வாய்ப்புகள் இல்லாததால் ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கியாக களமிறங்கியுள்ளார்.

மார்வெல் திரைப்படங்களில் லோகி கதாப்பாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றவரான டாம் ஹிடில்ஸ்டன், தான் சென்னைக்கு பல முறை வந்திருப்பதாகவும், அது மிகவும் சிறந்த இடம் எனவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரபல சின்னத்திரை காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளரான குட்டி கோபி பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்க இருப்பதாக ஒரு ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஷிவாங்கி. இவர் சமீபத்தில் தன் பெற்றோருடன் பிறந்தநாள் கொண்டாடிய காணொளியை வ்லாக் ஆக வெளியிட்டிருந்தார். அது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோரால் குறுகிய நேரத்தில் பார்க்கப்பட்டு அசத்தி வருகிறது.

பூவே பூச்சூடவா தொடரிலிருந்து தான் விலகப் போவதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என தன் படவரி பக்கத்தின் மூலமாக தெரிவித்திருக்கிறார் ரேஷ்மா ரவிச்சந்திரன்.

டிஆர்பியில் இந்த வாரமும் விஜய் டிவிக்கு பெருத்த சறுக்கலே மிஞ்சியது. முதல் ஐந்து இடங்களில் ஒன்றை மட்டுமே அது கைப்பற்றியது. ஐந்து இடங்களில் நான்கு இடங்களை சன் டிவியின் நிகழ்ச்சிகளே ஆக்கிரமிக்கின்றன. இது விஜய் மற்றும் ஜீ குழுமத்தை கவலை கொள்ள வைத்துள்ளது.

மீண்டும் சுவாரசிய செய்திகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published.