தமிழகத்தில் கொரானா நோய்த் தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட அரசுப்பள்ளி முதுகலைத் தமிழ் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தமிழ்ப்பாடத்தைக் காணொலியாக வடிவமைத்து மாணவர்களுக்கு க்கல்வி கற்பித்து வருகின்றனர்.
அத்தொடர் பணியில் பன்னிரண்டாம் வகுப்புத்தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் எழுத்தாளர் பூமணியின் உரிமைத் தாகம் என்னும் சிறுகதையைக் குறும்படமாக எடுத்துள்ளனர்.
இக்குறும்படத்தில் அரசுப் பள்ளி முதுகலைத் தமிழ் ஆசிரியர்களே நடித்துள்ளனர் .
இப்படத்துக்கான முகப்புப் பாடல் எழுதியதும் பாடியதும் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களே !
இக்குறும்படத்தை அரசுப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் திரு.சி. பார்த்திபன் அவர்கள் இயக்கியுள்ளார் .
அன்புத் தமிழ்நெஞ்சம் என்ற குழுவின் பெயரில் தமிழ்ப் பாடத்தோடு தொடர்புடைய இடங்களுக்கே நேரடியாகச் சென்று படம் பிடித்து மாணவர்களுக்குப் பாடத்தைப் படமாக்கி வருகின்றனர் அரசுப் பள்ளித் தமிழ் ஆசிரியர்கள் .
பாடத்தில் இடம்பெற்றிருக்கும் படைப்பாளிகளை நேரடியாகச் சந்தித்து அவர்களுடைய நேர்காணலைப் பெற்று மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவத்தை இவர்கள் தந்து கொண்டிருக்கின்றனர்.
அதன் தொடர் தேடலில் பிரான்சுக்குப் புலம் பெயர தமிழகத்துக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் பிரமிள் அவர்கள் வேலூரில் மரணம் அடைந்தார். அவருடைய கல்லறையையும் வேலூரில் கண்டெடுத்து மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தியதைத் தமிழ்ச்சான்றோர்க ள் வரவேற்று அத்தமிழ் ஆசிரியர்களைக் பாராட்டியுள்ளனர் .