தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
அதன்படி இன்று (22.05.2026) முதல் வரும் 26.05.2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். இன்று கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மேலும் நாளை (23.05.2026) அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.” என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
16 இடங்களில் வெயில் சதம்
ஈரோடு – 106.52
மீனம்பாக்கம் – 105.44
திருத்தணி – 104
வேலூர் – 104
மதுரை நகரம் – 103.64
திருச்சி – 103
மதுரை விமானநிலையம் – 102.92
நுங்கம்பாக்கம் – 102.56
தஞ்சை – 102
கடலூர் – 100.22
கரூர் பரமத்தி – 102
நாகை – 100.76
நாமக்கல் – 100.76
பாளையங்கோட்டை – 100
பரங்கிபேட்டை – 100
தூத்துக்குடி – 100

