“நலம் TN” செயலி அறிமுகம்..! தமிழக மருத்துவ சேவையை முதலமைச்சர் விஜய் துவங்கி வைத்தார்.

அரசியல் ஆரோக்கியம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மருத்துவம்

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.139 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, மாநில மக்களுக்கு அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் எளிதாக பெற உதவும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த இணையதள சேவையான ‘நலம் TN’ மற்றும் ‘நலம் ஏ.ஐ.’ வாட்ஸ்-அப் செயலியையும் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.இந்த புதிய டிஜிட்டல் தளங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட நன்கொடையாளர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு தங்களது பங்களிப்புகளை எளிமையாக வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *