கோவிட் விதிமுறை மீறல்கள் வழக்கு அனைத்தும் தள்ளுபடி – டிஜிபி அறிவிப்பு

தமிழ்நாடு

கோவிட் தீவிர பரவலின் போது, கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த தடையை பொருட்படுத்தாது வெளியே உலாவியவர்கள் மீது கோவிட் பரப்பியதாக பல லட்சம் வழக்குகள் பதிவு செய்தனர். தற்போது கோவிட் கட்டுக்குள் வந்ததையடுத்து இதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி, மாதம் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கோவிட் காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் மீது 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகள் அனைத்தும் பொது மக்களின் நலன் கருதி வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பை, செயல்படுத்தி, வழக்குகளை வாபஸ் பெறும்டி, போலீசாருக்கு உள்துறை செயலர் பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு , மண்டல ஐஜி.,க்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பி.,க்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், முதல்வர் உத்தரவுப்படி கோவிட் காலத்தில் வன்முறைக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இபாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தவிர மற்ற கோவிட் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை வரும் 17 ம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *