டில்லியில் ரேபிடோ, ஓலா, உபர் போன்ற வாடகை டாக்ஸிகளுக்கு தடை, மீறினால் அபராதம், சிறை தண்டனையென அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள்

பைக் டாக்சி சேவைகளை தடை செயது டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேபிடோ, ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஆட்டோ, கார், பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றனர். இந்த சேவையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகின்றனர்.
மேலும் முறையான உரிமம் இன்றியும், சாலை விதிகளை மதிக்காமலும் பைக் டாக்ஸி சேவையில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 படி மீறலாகும், தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமம் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published.