தேமுதிக நிறுவனத் தலைவர், தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் காலை 6.10 மணிக்கு காலமானார்.விஜயகாந்தின் இறுதி மரியாதை நாளை மாலை 4.45 மணிக்கு கோயம்பேட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், டி.ராஜேந்தர், நடிகர்கள் கவுண்டமணி, ஆனந்தராஜ், கவிஞர் வைரமுத்து நேரில் அஞ்சலி. நடிகர்கள் விஜயகுமார், ஆனந்தராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் கணேஷ், ஆர்த்தி, ரோபோ சங்கர், அதர்வா, பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.தொடர்ந்து நடிகை கோவை சரளா, நடிகர்கள் விக்னேஷ், மன்சூர் அலிகான், பாடலாசிரியர் சினேகன். நடிகர் விஜய்சேதுபதி, நடிகர்கள் அர்ஜுன், ஷாம், விமல், கருணாஸ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நேரில் அஞ்சலி. தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி. அஞ்சலி.அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அஞ்சலி. இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக முதன்மை செயலாளர் துரை-வைகோ நேரில் அஞ்சலி. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி. அண்ணாமலை, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *