டுவிட்டர் நிறுவனத்தை விலை பேசும் எலான் மஸ்க்

உலகம்

சமூக வலைதளங்களில் பிரதானமான ஒன்றாக விலங்குவது டுவிட்டர் தளம். இதன் பங்குகளை சமீபத்தில் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியிருந்தார். இதன் மூலம் அதன் இயக்குனர் குழுவில் ஒருவராக அவரும் சேர இருந்த நிலையில் அதிலிருந்து பின்வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் அந்நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது டுவிட்டரின் 9% பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் மஸ்க் 4100கோடி ரூபாய்க்கு டுவிட்டரை விலை பேசி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் டுவிட்டரை வாங்கும் பட்சத்தில் அதன் பங்குகள் உயர வாய்ப்புள்ளதாகவும், அதில் பல மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *