டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா அணி.
டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.
முதல் இன்னிங்சில் 56 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி கொடுத்தது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணியில், எந்த வீரரும் இரட்டை இலக்கத்தை கூட எடுக்க முடியவில்லை.
அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஒமர்சாய் மட்டும் போராடி 10 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் சார்பில் அதிகபட்சமாக ஷம்சி, ஜான்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா, நோர்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதையடுத்து 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியதென் ஆப்பிரிக்கா அணி, 1 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ஹெண்டிரிக்ஸ் 29 ரன்களும், மார்க்கரம் 23 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம், வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணி, உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.