இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் – உலகத் தலைவர்கள் இரங்கல்

கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள்

பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த, இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96ம் வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். உலகிலேயே அதிக காலம் அரசாட்சி செய்தவர் என்றப் பெருமக்குறியவர். 1952ம் ஆண்டு தனது தந்தை ஜார்ஜ் மறைவிற்கு பிறகு இங்கிலாந்தான் ராணியாக முடிசூடிக்கொண்டார். அன்றுமுதல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். அதாவது 70வருடங்கள், 214 நாட்கள் ஆட்சியில் இருந்தார்.
இங்கிலாந்து ராணியாக மட்டும் இல்லாமல் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பொறுப்பும் இங்கிலாந்து ராணியைச் சாரும். ராணி எலிசபெத் இறப்பைத் தொடர்ந்து அவரது மகன் இளவரசர் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொள்வார். ராணி எலிசபெத் இறப்பு உலகின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இவரது இறுதிச் சடங்கு மிகப்பெரிய அளவில் நடத்தப்படும்.
ராணி எலிசபெத் இறப்புச் செய்தி அரசு நெறிமுறைகளுக்கு கட்டுபட்டு வெளியிடப்படும். ராணி எலிசபெத் இறப்புச் செய்தி அறிந்தவுடன், ராணியின் தனிப் பாதுகாப்பு செயலர் இச்செய்தியை இங்கிலாந்து பிரதமருக்கு அறிவிப்பார். இங்கிலாந்து பிரதமர் அதனை உலகிற்கும், ஊகடங்களுக்கும் அறிவித்தவுடன் அனைத்து வழக்கங்களும் நடைமுறைக்கு வரும். அதாவது பிரிட்டிஷ் தேசியக் கொடி பக்கிங்ஹம் அரண்மனையில் பாதிக் கம்பத்தில் பறக்கவிடப்படும். பிரிட்டிஷ் அதிகாரப்பூர்வ ஊடகமாக பிபிசி தனது லோகோவை கருப்பு நிறத்தில் மாற்றி அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து ராணி தொர்டபான செய்திகளை, ஆவணப்படங்களை ஒளிபரப்பத் தொடங்கும். துக்கம் அனுசரிக்கும் நாட்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் எதுவும் ஒளிபரப்பக் கூடாது. உடனடியாக அடுத்து பட்டத்துக்கு தகுதியாக இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொள்வார். கிரேட் பிரட்டன் தேசியக் கீதம் ராணியை கடவுள் ஆசீர்வதிப்பாராக என்பதை மாற்றி மன்னரை கடவுள் ஆசீர்வதிப்பாராக என்று மாற்றப்படும். இங்கிலாந்தான் பணத் தாள்களில் அச்சிடப்படும் ராணியின் புகைப்படம் நீக்கப்பட்டு மன்னர் சார்லஸ் புகைப்படம் அச்சிப்படும். அதேப் போன்று இங்கிலாந்தின் கடவுச்சீட்டில் ராணியின் புகைப்படம் நீக்கப்பட்டு மன்னர் சார்லஸ் புகைப்படம் அச்சிப்படும்.
ராணி எலிசபெத் இறப்பு நிகழ்வு “லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்” என்று அழைக்கப்படும். ராணி மறைந்தவுடன் செய்யும் நடைமுறைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவேண்டும். “லண்டன் பிரிட்ஜ்” ஆப்ரேஷேன் முன்கூட்டியே இதனை திட்டுமிட்டு அனைத்தும் முறையாக வழிநடத்தும். ராணியின் இறப்புச் செய்தி அறிவிக்கப்பட்டதும் உலகத் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராணியுடனான தங்களது சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து நினைவுகளோடு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015, 2018ம் ஆண்டுகளில் தனது இங்கிலாந்தின் பயணித்தின்போது ராணியுடனான சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து இரங்களைத் தெரிவித்தார்.
ராணியின் உடல் லண்டனுக்கு கொண்டுவரப் பட்டு நான்கு நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். இந்த துக்கநிகழ்வு 10 நாட்கள் நடைபெறும். ராணியின் இறுதிச் சடங்கில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *