தமிழகத்தில் தொழிற்துறையில் அதிகம் பங்கு வகிப்பது சென்னை அதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் நகரம். இவ்விரண்டு நகரங்களுக்கு அடுத்தபடியாக ஓசூர் நகரம் விளங்குகிறது. இங்க டிவிஎஸ், அசோக் லைலாண்டு மற்றும் நிப்பான் போன்ற பெறிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து இங்கு ஓசூர் நகருக்கு குடிபெயர்ந்து வசிக்கின்றனர்.
ஓசூர் சிப்காப்ட் தொழிற்பேட்டை இருப்பதால் பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஓலா நிறுனத்தின் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் தொழிற்சாலையும் ஓசூர் அருகே தான் அமைந்திருக்கிறது.
இதுபோன்று ஓசூர் சாலைப் போக்குவரத்து, தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை, தகுந்த தட்பவெப்பநிலை, தொழிற்சாலை அமைய ஏதுவான இடம் எல்லாம் கிடைப்பதால் ஓசூரில் அனைத்து வகையான தொழிற்சாலைகளும் அமைகிறது. பெங்களூரு மாநகர மெட்ரோ ரயில் ஓசூர் வரையில் நீட்டிக்கவும் ஆராயப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமான நிலையம் அமையவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது டாடா நிறுவனம் தனது தொழிற்சாலையை ஓசூரில் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது இந்த தொழிற்சாலை. இத்தொழிற்சாலை அமையும் பட்சத்தில் மிகப்பெரிய வளாகம் கொண்ட தொழிற்சாலையாக இது இருக்கும். இதனால் பல ஆயிரம் இளைஞர்களுக்கு புது வேலை வாய்ப்புகள் உருவாகும்.