தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரான அரியானாவை சேர்ந்த 26 வயது நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஒடிசாவை சேர்ந்த 28 வயது ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் குமார் ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஏஸ் ஈட்டி எறிதல் போட்டியில் 82.27 மீட்டர் எறிந்து தங்கம் வென்று அசத்தினார். கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறும் போட்டியில் ஒலிம்பிக் கதாநாயகன் நீரஜ் சோப்ரா கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.

