உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ்.

இந்தியா செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி விளையாட்டு

தமிழக வீரர் குகேஷ், உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. கேண்டிடேட்ஸ்’ தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் குகேஷ், உலகின் ‘5வது’ செஸ் வீரர், மற்றும் ‘நடப்பு உலக சாம்பியனான ‘ சீனாவின் டிங் லிரென் ஆகியோர் விளையாடுகின்றனர்.மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும் இந்த போட்டியில், முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர் உலக சாம்பியன் பட்டம் வெல்வார். குகேஷ் மற்றும் டிங் லிரென் இடையே நடந்த இறுதி போட்டியில், குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெறுகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ்க்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *