இந்தியா 3-ஆவது முறையாக ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது!

இந்தியா சிறப்பு சீனா செய்திகள் விளையாட்டு

இந்திய மகளிர் அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பரபரப்பான இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் அணி சீனாவின் மகளிரணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், நடப்பு சாம்பியனான இந்திய அணி 3வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ளது, இது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இந்திய அணி வீராங்கனை தீபிகா 31வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். இதனை அடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை வென்றதுஇந்தியஅணி.இந்த தொடரில் இந்திய வீராங்கனை தீபிகா 11 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த நபராக முதலிடத்தில் உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன அணியை இந்திய அணி தோற்கடித்தது வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *