அமெரிக்காவின் அதானி மீதான குற்றச்சாட்டுகள் இந்திய பங்குச்சந்தையை பாதித்துள்ளன. சென்செக்ஸ் 550+ புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம் வட அமெரிக்கா

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இன்று (நவ.21) காலை சரிவுடன் ஆரம்பமாகியுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள குற்றச்சாட்டுகள் இதற்கான காரணமாகக் கூறப்படுகின்றன.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 77,711 புள்ளிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, சென்செக்ஸ் சுமார் 550 புள்ளிகள் குறைந்தது. காலை 11 மணியளவில், சென்செக்ஸ் 77,046 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், 23,488 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி 50, சுமார் 213 புள்ளிகள் குறைந்தது. காலை 11 மணி நிலரப்படி, நிஃப்டி 50 23,335 புள்ளிகளுடன் வர்த்தகம் உள்ளது . சுமார் ரூ.2 லட்சம் கோடியை இழந்த அதானி குழுமம், வியாழக்கிழமை காலை, அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் குறைந்தன. அமெரிக்காவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் இதற்கான காரணமாக இருக்கின்றன. இதன் விளைவாக, அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடி குறைந்துள்ளது. மூலதன சந்தை தரவுகளின் அடிப்படையில், தற்போது அதானி குழுமத்தின் 11 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.12.3 லட்சம் கோடியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *