அக்டோபர் 1 முதல் இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற நாட்டவர்களுக்கு புதிய மின்னணு வருகை அட்டை வசதி அமல்படுத்தப்படுகிறது.இதன் மூலம் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் இனி விமான நிலையத்தில் வரிசையில் நின்று காகிதப் படிவங்களை நிரப்பத் தேவையில்லை. அதிகாரப்பூர்வ இந்திய விசா ஆன்லைன் வலைத்தளம் மூலம் மின்னணு வருகை அட்டையை பயணத்தின் 72 மணி நேரத்திற்கு முன்பே பாஸ்போர்ட் விவரம், போன் நம்பர், வருகையின் நோக்கம் போன்ற தகவல்கள் கொண்டு பூர்த்தி செய்யலாம். இந்த மின்னணு வருகை அட்டை இந்திய குடிமக்கள் அல்லது OCI card வைத்திருப்பவர்களுக்கு தேவையில்லை என்றுகூறப்படுகிறது. மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் விமான நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய வசதி விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
