2026 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு.

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விளையாட்டு

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழிநடத்த உள்ளார். துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு தேர்வு கிடைத்துள்ளது என்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகள் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *