கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.அதில், 2023ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், 2024ஆம் ஆண்டில் 1,368 இந்தியர்களும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், 2025 ஜனவரி முதல் நவம்பர் 28 வரை மட்டும் 3,258 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.2025 ஜனவரி 20ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதற்கு பிறகு, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள், விசா காலம் முடிந்தும் தங்கியவர்கள், சரியான ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.மேலும், வரி விதிப்புகள், H1B விசா கட்டுப்பாடுகள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான டிரம்ப் அரசின் தொடர் நடவடிக்கைகள் இந்தியாவை நேரடியாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளன

