இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது; முதலீடு செய்த முதலீட்டாளர்கள் உற்சாகம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

மும்பை பங்குச் சந்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாக 75 ஆயிரத்து 500 புள்ளிகள் வரை சென்றதால், முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்திய பங்குச்சந்தையில் காலை முதலே ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் குறியீடு ஆயிரத்து 197 புள்ளிகள் உயர்வுடன் 75 ஆயிரத்து 418 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டியும், 370 புள்ளிகள் உயர்ந்து, 22 ஆயிரத்து 967 புள்ளிகளில் நிலைப்பெற்றது.
மே 24ஆம் தேதியும் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் நீடித்தால், 23 ஆயிரம் என்ற புதிய மைல் கல்லை நிஃப்டி எட்டும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், எந்த அரசு அமைந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராகவே இருக்கும் என முதலீட்டாளர்கள் நம்புவதால், பங்குச்சந்தையில் அவர்களின் எண்ணம் எதிரொலித்திருப்பதாக முதலீட்டு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி, முன்னணி வங்கிகளின் பங்கு மதிப்பு தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பதால், அடுத்த சில நாட்கள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பெரிதாக வீழ்ச்சியை சந்திக்காது என்றும் சந்தையின் போக்கை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *