தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். அதன்படி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்குவது பற்றியும் தலைமைச் செயலாளர் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாக உள்ள நிலையில் பள்ளி திறப்பை தள்ளிவைக்கலாமா? என்பது குறித்த முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6இல் பள்ளிகள் திறக்க பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.