ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷன் கேப்டன்!

ஐபிஎல் தொடர் செய்திகள் பொழுதுபோக்கு முதன்மை செய்தி விளையாட்டு

வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள இந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடரை முன்னிட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் இடைக்கால தலைவராக ஈஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியின் நிரந்தர தலைவரான பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக தற்போது ஓய்வில் உள்ளார். இதனால் இந்த தொடரின் தொடக்கத்தில் சில போட்டிகளில் அவர் விளையாட முடியாமல் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கம்மின்ஸ் மீண்டும் அணியுடன் இணையும் வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஈஷான் கிஷன் தலைவராக வழிநடத்த உள்ளார். அணியின் துணை தலைவராக அபிஷேக் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த தொடரில்தான் ஈஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்தார். சமீபத்தில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில் அவர் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *