காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
	

 
						 
						