33 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அணு ஆயுத பரிசோதனைகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கவுள்ளது. அணு ஆயுத பரிசோதனைகளை உடனே தொடங்குமாறு அமெரிக்க போர்த்துறைக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆணையிட்டுள்ளார்.
சீனாவும், ரஷ்யாவும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அணு ஆயுத வலிமையைப் பெருக்கி வருகின்றனர். அதே நேரம் 1992- ஆம் ஆண்டை அணு ஆயுத பரிசோதனைகளை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. தற்போதையை சூழல்களைக் கருதி மீண்டும் அணு ஆயுத சோதனைகளைத் தொடங்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சீன அதிபரைச் சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த உத்தரவை அதிபர் பிறப்பித்ததால் இந்த உத்தரவு கவனம் பெறுகிறது. மேலும், உலகின் எந்த பகுதியிலும் தாக்கும் ஏவுகணையை ரஷ்யா உருவாக்கியுள்ள நிலையில் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

