அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதப் பைலட் இல்லாமல் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டில் இயங்கும் போர் விமானத்தை வடிவமைத்து உள்ளனர். ஓடுதளம் இல்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக ஏறும், ஒரே முறை பறக்கும் திறனைக் கொண்ட இந்த நவீன வானூர்தியை ஷீல்ட் ஏ.ஐ. (Shield A.I.) நிறுவனம் உருவாக்கியுள்ளது.இந்தத் தானியங்கி போர் விமானம் X-BAT என்று பெயரிடப்பட்டுள்ளது. X-BAT 4 என்ற மாடல் 26 அடி நீளம் மற்றும் 39 அடி இறக்கை அகலத்தை கொண்டுள்ளது. இதன் தெரிவு திறன் சக்தி குறிப்பிடத்தக்கது — அதிகபட்சம் 50 அடி உயரம் வரை எளிமையாக பார்க்கும் மற்றும் 3,700 கிலோமீட்டர் வரை தொடர்ச்சியாகப் பறக்கக் கூடிய திறன் கொண்டது.X-BAT இன் ஒரு முக்கிய தன்மை — அதில் துல்லியமான தாக்குதலுக்கான ஆயுதங்கள் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டும் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எதிரி விமானங்களையும் தரையில் உள்ள இலக்குகளையும் அடையாளம் கண்டு தாக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.ஷீல்டு ஏ.ஐ. நிறுவனம் X-BAT இன் இறுதி கட்ட சோதனைகளை தற்போது நடந்துக் கொண்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்தை 2028 முதல் முழு அளவில் முடித்து மேலும் பல X- BAT தயாரிக்க தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறன.

