ரோட்ரிக்ஸ் சிங்:FBI இன் $25,000 பரிசு அறிவிப்பு

இந்தியா உலகம் செய்திகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா

ரோட்ரிக்ஸ் சிங்கைப் பிடிக்க உதவும் எந்த வகையான தகவல் தருபவர்களுக்கு $25,000 பரிசு FBI அறிவித்துள்ளது.

அக்டோபர் 2022 முதல் காணாமல் போன 6 வயது சிறுவனின் வழக்கில் தொடர்புடையதற்காக அவர் தேடப்பட்டு வருகிறார்.
இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு தொடர்புகளைக் கொண்ட ரோட்ரிக்ஸ் சிங், சிறுவன் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வருகிறார்.

குடும்பம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் துறையின் விசாரணை மார்ச் 20, 2023 அன்று, டெக்சாஸ்ல் எவர்மேன் காவல் துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது .

அதில் ரோட்ரிக்ஸ் சிங் அதிகாரிகளுக்கு தவறான பதில்களை கூறி விசாரணையை வேறு திசைக்கு திருப்பியதாக கூறப்படுகிறது.
விசாரணையில் ரோட்ரிக்ஸ் சிங் கூறியது, காணாமல் போனதாக கூறும் அந்தச் சிறுவன் தனது தந்தையுடன் மெக்ஸிகோவில், நவம்பர் 2022 முதல் தங்கியுள்ளதாக கூறினார்.


FBI யின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இரண்டு நாட்களுக்குப் பிறகு, மார்ச் 22, 2023 அன்று, ரோட்ரிக்ஸ் சிங், அவரது கணவர் மற்றும் மேலும் ஆறு குழந்தைகளும் இந்தியாவிற்கு விமானத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் காணாமல் போனதாக கூறும் அவரது மகன் விமானத்தில் அவர்களுடன் செல்லவில்லை என்பது தெரியவந்தது.

அக்டோபர் 31, 2023 அன்று டாரன்ட் கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் ரோட்ரிகஸ் சிங் அந்தச் சிறுவனை கொலை செய்ததாக அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டார்.

நவம்பர் 2, 2023 அன்று ஃபெடரல் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 22 அன்று ரோட்ரிக்ஸ் சிங், அவரது குடும்பத்தினரும் இந்தியாவிற்கு விமானத்தில் ஏறியபோது தான அவரை அனைவரும் கடைசியாக பார்த்ததாக FBI உறுதிப்படுத்தியது.

ரோட்ரிக்ஸ் சிங் கடைசியாக 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி, அவரும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டதாக அறியப்பட்டதாக FBI தெரிவித்துள்ளது.

ரோட்ரிக்ஸ் சிங் டல்லாஸில் பிறந்தார், எனவும் அவருக்கு இப்போது 39 வயதாகிறது. அவர் 5’1” மற்றும் 5’3” உயரமும் அவரின் முதுகு, இரண்டு கால்கள், வலது கை மற்றும் கழுத்து ஆகிய இடத்தில் பச்சை குத்தி இருக்கும் என்றும்

FBI அவரை பழுப்பு நிற கண்கள், பழுப்பு நிற முடி கொண்டவர் மற்றும் பொது நிறத்துடன் இருப்பார் என்று FBI வகைப்படுத்தியுள்ளது.

ரோட்ரிக்ஸ் சிங் பிடிபடும் வகையில் எந்த தகவலுக்கும் FBI $25,000 வெகுமதி அளிக்கவும் உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *