ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ’ஒரு பேரே வரலாறு’ தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ’ஜனநாயகன்’ என்னும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரேமலூ புகழ் மமிதா பைஜூ, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

