எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு, தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி, தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.கடந்த நவம்பர் 4-ஆம் தேதி, வீடு வீடாகச் சென்று எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணி தொடங்கியது. அந்தப் படிவங்களை வழங்குதல், வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்தல் மற்றும் அவற்றை பதிவு செய்தல் ஆகிய பணிகள் முதலில் டிசம்பர் 4-ஆம் தேதி முடிவடைய இருந்தது.ஆனால், பல இடங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதால், இந்தப் பணிக்கான கால அவகாசத்தை நீட்டிக்க அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. இதையடுத்து, கணக்கீட்டு படிவங்களைப் பெறுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இந்த பணிகளின் அடிப்படையில், இன்று டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள், இரட்டை பதிவு செய்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரம் வருமாறு:குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள்: 66.4 லட்சம் பேர்ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள்: 3.98 லட்சம் பேர்இறந்தவர்கள்: 26.9 லட்சம் பேர்இவ்வாறு, மொத்தமாக 97.28 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.மேலும், வாக்காளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களின் எண்ணிக்கை 5.43 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

