நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக இன்று 12 மாநிலங்கள்,1 யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இந்நிலையில், மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்:
அசாம் – 70.66%
பீகார் – 53.03%
சத்தீஸ்கர் – 72.13%
ஜம்மு & காஷ்மீர் – 67.22%
கர்நாடகா – 63.90%
கேரளா – 63.97%
மத்தியப் பிரதேசம் – 54.58%
மகாராஷ்டிரா – 53.51%
மணிப்பூர் – 76.06%
ராஜஸ்தான் – 59.19%
திரிபுரா – 76.23%
உத்தரப் பிரதேசம் – 52.64%
மேற்கு வங்கம் – 71.84%
இறுதியாக 5 மணி நிலவரம் வெளியான நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
கேரளாவில் உள்ள மொத்தம் 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்டமாகவும், ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதே போல் அசாமில் 5 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 3 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 8 தொகுதிகள், திரிபுராவில் 1 தொகுதி, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

