13வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு – சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடடைபெறுகிறது

THE RISE இந்தியா இலங்கை உலகம் ஐரோப்பா கனடா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் பொருளாதாரம் மண்மணம் மலேசியா மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள் வேலைவாய்ப்புச் செய்திகள்

தி ரைஸ் – எழுமின் அமைப்பு நடத்தும் 13வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் 7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற இருக்கிறது.
இம்மாநாட்டினை சுவிட்சர்லாந்து அதிபர் திறந்து வைக்கிறார். இம்மாநாடு டாவோஸ் காங்கிரஸ் அரங்கில் நடைபெறது கூடுதல் சிறப்பாகும். தமிழர்கள் உள்ளூரில் செய்யும் தகுதி கொண்ட தொழில்களை உலகமயப் படுத்துவது; ஏற்றுமதி – இறக்குமதி வணிகத்தில் தமிழரிடையே உலகளாவிய வலைப் பின்னல்களை வசதிப் படுத்துவது; தொழில்- வணிக வளர்ச்சிக்கு அடிப்படடைத் தேவையான மூலதனத்தை திரட்ட வழிகாட்டவது ஆகியவை இம்மாநாட்டின் நோக்கமாகும்.
தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான தொழில்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் பத்து தொழில்களையேனும் உலக அளவில் விரிவுப்படுத்த வழிவகை செய்யவேண்டும் என்ற இலக்கினை தி ரைஸ் டாவோஸ் மாநாடு வகுத்துள்ளது. வடகிழக்கு இலங்கை, மலையகம், இந்தியத் தமிழகம் மற்றும் மலேசிய நாடுகளில் தொழில் தொடங்க விரும்பும் புத்தாக்கத் தொழில் முனைவோர் 20 பேருக்கு தொடக்க நிலை நிதி உதவி வழங்கவும் டாவோஸ் மாநாடு திட்டமிட்டுள்ளது. இவர்களில் பெண்களுக்கு சிறப்பு முன்னுரிமை தரப்படும்.
ஏற்றுமதி- இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு டாவோஸ்
மாநாடு பெரும் வாய்ப்பாக அமையும். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள், வளைகுடா நாடுகள்-கனடா-அமெரிக்க நாடுகளின் சந்தைகேளாடு தொடர்புகள் ஏற்படுத்தி ஏற்றுமதி- இறக்குமதி வணிகம் மற்றும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த வணிகம் செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த மாநாட்டில் அரிய வாய்ப்புகள் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டுமே 300-க்கும் மேலான வெற்றித் தமிழரகள் இம்மாநாட்டில் பங்கேற்கிறாரகள். வெவ்வேறு துறைகளை சாரந்தவர்கள் பயன்பெறும் வண்ணம் சிறப்பு
வட்டங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன. தமிழகம், ஐரோப்பா பின்னலாடை ஏற்றுமதிவட்டம்; மனிதவளத்துறை வட்டம்;
லித்தியம்-நிக்கல்-குரோமியம் கனிமவள வடட்ம்; உணவுப் பொருள்கள் ஏற்றுமதி வட்டம்; மீன் உணவு ஏற்றுமதி வட்டம்; மருந்து உற்பத்தி துறை வட்டம்; பூக்கள் பூக்களின் சாறு, வனப்புப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி வட்டம்; செயற்கை அறிவு தொழில்கள் மற்றும் விற்பன்னர்கள் வட்டம்; தங்க உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் வட்டம், அனைத்துலக சரக்குப் போக்குவரத்துத் துறையினர் வட்டம்; கல்வித் துறையினர் வட்டம், மருத்து வத்துறையினர் வட்டம். இவ்வாறு 30க்கும் மேற்பட்ட சிறப்பு வட்டங்கள். இந்த மாநாடு வெறும் கூடிப் பேசி கலையும் மாநாடல்ல, எல்லோரும் பயன்பெறும் மாநாடு என்பதை நிருபிக்கும். டாவோஸ் பொது மாநாடு ஒருபுறம் நடக்க “தி ரைஸ் ” எழுமின் தனிப் பிரவுகளும் தமது மாநாடுகளை டாவோஸ் காங்கிரஸ் அரங்கில் திட்டமிட்டுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் அனைத்துலகத் தமிழ் பொறியாளர் பேரவையினர், ஐ.டி துறையினர், அனைத்துலகத் தமிழ் வழக்கறிஞர்கள் பேரவையினர், படட்யக் கணக்கர்கள் மற்றும் நிதி
மேலாண்மை பேரவையினர் தனித்தனி சிறு மாநாடுகள் நடத்துகின்றனர். குறிப்பாக அனைத்துலகத் தமிழ் பொறியாளர்கள் மாநாடு மிகுந்த
எதிர்பார்பினை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *