நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவு; தேர்தல் ஆணையம் தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் நான்கு கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஐந்தாம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேஷம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட என மொத்தம் 6 மாநிலங்கள், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 49 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இன்றிரவு 8 மணி நிலவரப்படி மொத்தம் 57.47% சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் ( 5 தொகுதிகள் ) – 52.60%
ஜம்மு-காஷ்மீர் ( 1 தொகுதி )-54. 49%
ஜார்க்கண்ட் ( 3 தொகுதிகள் ) – 63%
லடாக் ( 1 தொகுதி ) – 67.15%
மகாராஷ்டிரா ( 13 தொகுதிகள் ) – 48.88%
ஒடிசா ( 5 தொகுதிகள் ) – 60.72%
உத்தரப் பிரதேசம் ( 14 தொகுதிகள்) – 57.79%
மேற்கு வங்கம் ( 7 தொகுதிகள்) – 73%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *