ரஜினி 171 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்; அதிரடி ரஜினியை பார்க்கலாம் என ருசிகர தகவல்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தலைவர் 171 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தை குறித்து ஒரு முக்கியமான அபிடேடே ஒன்றை கொடுத்துள்ளார்.
தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் அடுத்து லோகேஷ் கனகராஜுடன் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் கமிட்டாகியுள்ளார். ஃபைட் கிளப் படத்தின் பிரமோஷனின்போது பேசிய லோகேஷ் கனகராஜ், ‘இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ளதாகவும் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை இன்னும் 2 மூன்று மாதங்களில் முடித்துவிடுவேன் என்றும், ஏப்ரல் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் வேலைகள் குறித்து தொடர்ந்து தனக்கு கால் செய்து ரஜினி கேட்டறிவார் என்றும் தான் ஏதாவது வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டாலும் அவருக்கு அது தெரிந்துவிடும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தப் படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகளை பயன்படுத்த உள்ளதாகவும் நீண்ட காலங்களுக்கு பிறகு அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் ரஜினியை பார்க்கலாம் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுவரை முயற்சிக்காத வித்தியாசமான ஜானரில் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை கேட்டுவிட்டு நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தியாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *