மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய அதிகபட்ச தொகுதிகள். அதேபோல், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனா 57 தொகுதிகளையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
இவ்வளவு பெரிய வெற்றி பெற்று, தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையிலும், அந்த மாநிலத்தில் இன்னும் புதிய அமைச்சரவையும் முதல்வரும் யார் என்பது முடிவு எடுக்கப்படாமல், பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்த ஆலோசனையில் மகாராஷ்டிரா முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து சி.என்.என். நியூஸ்18-க்கு கிடைத்த தகவலின்படி, ஏக்நாத் ஷிண்டே, அமைச்சரவையில் தனது சிவசேனாவிற்கு 12 அமைச்சர் பதவிகளை கேட்டிருக்கிறார்.
ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய மூவருடனும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.