இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் நகைகளை வெறும் அலங்காரமாக அல்லாமல், தங்களின் தனித்துவம் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு ஸ்டைல் ஆக அணிகிறார்கள். குறிப்பாக விளையாட்டு வீரர்களின் எளிமையான மற்றும் நம்பிக்கையூட்டும் தோற்றம் இளைஞர்களை அதிகமாக ஈர்க்கிறது. ஸ்டேடியத்தில் அவர்கள் காட்டும் ஆற்றலுக்கும், வெளியே அவர்கள் கடைப்பிடிக்கும் ஸ்டைலுக்கும் இடையே ஒரு புதிய இணைப்பு உருவாகியுள்ளது.இந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் பிளாட்டினம் நகைகள் இன்றைய ஆண்களின் விருப்பமாக மாறியுள்ளன. இதன் ஒரு பகுதியாக ‘எம்.எஸ். தோனி கையொப்ப பதிப்பு’ பிளாட்டினம் கலெக்ஷன் அறிமுகமாகியுள்ளது. 95% தூய பிளாட்டினத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த நகைகளில் பிரேஸ்லெட் மற்றும் செயின் வகைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நகையிலும் எம்.எஸ். தோனியின் கையொப்பம் பொறிக்கப்பட்டுள்ளது. எளிமை, வலிமை மற்றும் உறுதியை பிரதிபலிக்கும் இந்த கலெக்ஷன், நவீன இந்திய ஆண்களின் அன்றாட ஸ்டைலுக்கு புதிய அடையாளமாக திகழ்கிறது.

