மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசியானர். அப்போது காங்கிரஸை கடுமையாகச் சாடினார்.
கடந்த 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து மறுநாள் அதாவது பிப். 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வந்தது. இதில் பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசியானர். அப்போது அவர், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம்.. அதில் எந்தவொரு தவறும் இல்லை.. ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவது தான் குடும்ப அரசியல்.. ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயல்வதால் தான் காங்கிரஸை இழுத்து மூடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. ஒரு சிலரின் முக்கியத்துவத்தைக் குறைக்கக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கான வாய்ப்பை மறுக்கிறார்கள்.
ஏழைகளுக்கு தேவையான வாய்ப்புகள், தொழிலுக்கான வழிவகையை செய்து கொடுத்தாலே நாட்டில் ஏழ்மை ஒழிந்துவிடும். சாலையோர வியாபாரிகள், கைவிணைக் கலைஞர்களுக்கு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பாஜக ஆட்சியில் 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு 4.8 கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ன. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்பங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு 3 கோடி பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளனர்.
பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டு வெற்றி பெறும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். காங்கிரசுக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சியமைத்து 1000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும் என்றார்.

