காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம்; மும்பை இண்டியன்ஸ் அணிக்கு புதிய கேப்டன்.?

இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா 2015 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் விளையாடி வந்தார். 2022 ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறி கேப்டனாக செயல்பட்டார். இரண்டு ஆண்டுகள் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். 2023 ஐபிஎல் தொடரில் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின்போது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். அதன் பின்னர் எந்தவொரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்காத பாண்டியா, கணுக்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்த மாதம் ஆப்கானிஸ்தானில் நடக்கும் டி20 தொடரிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், மேலும், அவரை தங்களது அணியின் புதிய கேப்டனாகவும் அறிவித்தது.
ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் மிகப் பெரிய முடிவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எடுத்தது. யாருக்காக இந்த கடினமான முடிவை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்ததோ, அவரே 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. காரணம், பாண்டியாவுக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமடையவில்லை என கூறப்படுகிறது.
இதனால், வரும் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பது சந்தேகமே என தகவல் வெளியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக வாய்ப்புள்ளதா? வேறு கேப்டனை அணி நிர்வாகம் தேர்வு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *