பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சலார் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.178.70 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் முதல் நாளில் அதிக தொகையை வசூலித்த இந்திய படம் என்ற சாதனையை சலார் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விஜய் நடித்த லியோ மற்றும் ஷாருக்கானின் ஜவான் படங்களின் ரெக்கார்டுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக சினிமா வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎப் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருந்தது கவனிக்கத்தக்கது. விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூபாய் 148.5 கோடி வசூலித்திருந்தது ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முதல் நாளில் 129.6 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

