சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பேர் போனவர் சாமி நித்தியானந்தா. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைலாசா என்னும் தனித்தீவில் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன வண்ணம் இருந்தன. ஆனால், தான் உயிருடன்தான் உள்ளேன் என அவர் சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது: எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. 27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் ஆய்வு செய்கின்றனர். தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜையை தவிர வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை.
நான் சமாதி மனநிலையில் இருக்கிறேன். விரைவில் மீண்டு வருவேன் ” என் தெரிவித்துள்ளார். இது அவரது பக்தர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.